மருத்துவமனையில் வரலாற்றுப் பொருட்களைப் பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டது

பிரித்தானிய காலனித்துவக் காலத்திற்குரிய மருத்துவமனை என்பதால் அதன் புராதன கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புராதன கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தபடுவதை உறுதி செய்வதன் மூலம் அவற்றின் வளமான பாரம்பரியம் மதிக்கப்படுகிறது

கிளினிக் கட்டிடத்தை புதுப்பித்தல்

வைத்திய கலாநிதி சனத் கொப்பரஹேவாவின் ஒருங்கிணைப்பு மற்றும் இராஜகிரிய டுவர்ஸ் அன்ட் டிரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் (RTT)-இன் தாராள நன்கொடையுடன் புனரமைக்கப்பட்டு புதிய தளபாடங்களுடன் கூடிய கிளினிக் கட்டிடம் ஏப்ரல் 23, 2023 அன்று பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.  of April,2023.